Festival Details

மஹா சிவராத்திரி விழா

தம் குலத்தைக் காக்கும் குலதெய்வக் கோவிலில் சுமார் 300 வருடங்களாக தவராமல் ஆண்டுதோறும் மாசி மாத மஹா சிவராத்திரி விழா சீரும் சிறப்புமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மேலே கண்ட வகைவரா மக்கள் மாசி மாத மஹா சிவராத்திரி விழாவிற்கு வருகை தந்து மூன்று தினங்கள் திருக்கோவிலிலே தங்கியிருந்து குலதெய்வங்களை வழிபட்டு வருகிறார்கள். மாசி மாத மஹா சிவராத்திரி தினத்திற்கு 21 நாட்கள் முன்பாக நமது திருக்கோவில் மருளாடிகளுக்கு காப்பு கட்டுதல் மற்றும் சிவராத்திரி தினத்திற்கு நினங்களுக்கு முன்பாக முளைப்பாரி பயிர்களை வளர்க்க ஆரம்பித்து மஹா சிவராத்திரி வழிபாட்டை துவங்குவார்கள். சிவராத்திரி தினம் முதல் நாளாக கணக்கில் எடுக்கப்பட்டு இரவு கும்ப பூஜையுடன் மஹா சிவராத்திரி விழா இனிதே ஆரம்பித்து நள்ளிரவில் மஹா யோகி அருள்மிகு பெரியாண்டவர் சுவாமி சன்னதியில் வாயில் காப்பாளர்களாக அருள்பாலிக்கும் பூமிகாவலன், தலைமலை சுவாமிகளுக்கும் பூஜை புனஸ்காரங்கள் செய்து பெரியாண்டவர் சுவாமி விருத்தப்பாடல்கள் பாடி வாயிற்காவலர்களை குடியழைப்பார்கள்

இரண்டாம் நாள் குலதெய்வவழிபாட்டுத்தாரர்கள் நங்களது குலதெய்வங்களுக்கு காலையில் முளைப்பாரி, பால்குடம் மற்றும் அக்னிசட்டி எடுத்ததுடன் பூஜைகள் தொடங்குகிறது. பகல் 11 மணிக்கு மேல் தங்களது வேண்டுதலை செவ்வனே நிறைவேற்றிய குலதெய்வகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பொங்கள் வைப்பார்கள். நண்பகல் 12 மணிக்கு அருள்தரும் நாச்சியார் அம்மன் சன்னதியில் ஸப்த கன்னியர் பூஜை வெகு சிறப்பாக செய்து வருகிறார்கள். அன்று மாலை 6 மணிக்கு நூற்றுக்கும் மேற்பட்ட சுமங்கலி பெண்களால் திருவிளக்கு பூஜை சிறப்பாக நடைபெறும் இரவு 10 மணிக்கு மே வில்லிசைடின் அருள்மிகு உத்தண்ட காலையசுவாமி அருள்தரும் பேச்சியம்மன் சுவாமி மற்றும் அருள்தரும் நாச்சியார் சுவாமி விருத்தப் பாடல்கள் பாடி காமிகள் குடியத்ைது குலதெய்ம மககள் வேண்டுதலின் பயனாக வரங்களை பெற்று சிறப்பு பெறுவார்கள்.

மூன்றாம் நாள் நாலை 10 மணியளவில் அருள்மிகு மருதப்ப சுவாமி அருள்தரும் வேளியார் அம்மன், அன்தரும் பூரண பொற்கொடியாள் மற்றும் அருள்தரும் நாச்சியார் அம்மன் ஆகிய உற்சவ மூர்த்திகளுக்கு நன்னீராட்டு மற்றும் 11 தினங்கள் வளர்ந்த முளைப்பாரி பயிர்களை நீரில் கரைத்து தீர்த்தவாரி திருவிழாலை சிறப்பாக நடத்தி குலதெய்வ மக்களை சீரும் சிறப்புமாக வாழ வழி செய்து தரும்படி வேண்டி தங்கள் குலதெய்வங்களை மனமகிழச் செய்து தயிர்விக்கும் நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

Festival Details

பங்குனி உத்திர திருக்கல்யாண வைபவம்

சோலைசேரி கிராமத்தில் வீற்றிருந்து தம்மை வணங்கும் தமது குலதெய்வ மக்களுக்கு அனைத்து வளங்களையும் சிறப்பாக வழங்கி அருள்பாலித்து வரும் அருள்மிகு மருதூர்அய்யன் என்ற மருதப்ப சுவாமிக்கு பங்குனி மாதம் வரும் உத்திர நட்சத்திரம் ஜென்ம நட்சத்திரம் ஆகும்.

சிறப்புகள் பொருந்திய பங்குனி மாத உத்திர நட்சத்திரம் அன்று அருள்மிகு மருதப்ப சுவாமிக்கும், அருள்தரும் வேளியார் அம்மன் மற்றும் அருள்தரும் பூரண பொற்கொடியாள் அம்மனுக்கும் திருக்கல்யாண வைபவங்கள் சீரும் சிறப்புமாக ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.

ஆனி முப்பழ பூஜை

ஆண்டுதோறும் ஆனி மாதம் மா, பலா, வாழை பழங்களைக் கொண்டு முப்பழம் செய்து நமது திருக்கோவில் அருள்மிகு பெரியாண்டவர் சுவாமி, அருள்தரும் வேளியார் அம்மன, அருள்தரும் பூரண பொற்கொடியாள் சமேத, அருள்மிகு மருதப்ப சுவாமி, அருள்தரும் நாச்சியார் அம்மன், அருள்தரும் பேச்சியம்மன், அருள்மிகு லாட சன்னாசி, அருள்மிகு உத்தண்ட காளையப்ப சுவாமி, அருள்மிகு தலைமலை சுவாமி மற்றும் அருள்மிகு பூமிகாவலன் சுவாமி ஆகிய தெய்வங்களுக்கு முப்பழ பூஜை சிறப்பாக நடைபெறுகிறது.

ஆடி வளைகாப்புத் திருவிழா

சூடிக்கொடுத்த சுடர்கொடியாள் ஸ்ரீஆண்டாள் நாச்சியார் ஜென்ம நட்சத்திரமாகிய ஆடி மாத பூரம் நட்சத்திரம் அன்று ஆண்டுதோறும் நமது திருக்கோவிலில் அருள்தரும் பேச்சியம்மனுக்கு சீரும் சிறப்புமாக வளைகாப்புத் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. அருள்தரும் பேச்சியம்மனுக்கு வளைகாப்பு திருவிழா நடத்தி அம்மனை மகிழ்வித்து அம்மனின் குலதெய்வ வழிபாட்டுதாரர்கள் அனைவரது குடும்பங்களும் வாழையடி வாழையாக அனைத்து வளங்களையும் பெற்று சிறப்பாக வாழ வழிபாடுகள் நடைபெறும்.

ஜப்பசி அன்னாபிஷேகம்

ஆண்டுதோறும் ஜப்பசி மாதம் நமது திருக்கோவிலில் அருள்மிகு பெரியாண்டவர் சுவாமி, அருள்தரும் வேளியார் அம்மன், அருள்தரும் பூரண பொற்கொடியாள் சமேத அருள்மிகு மருதப்ப சுவாமி, அருள்தரும் நாச்சியார் அம்மன் அருள்தரும் பேச்சியம்மன், அருள்மிகு லாட சன்னாசி, அருள்மிகு உத்தண்ட காளையப்ப சுவாமி, அருள்மிகு தலைமலை சுவாமி மற்றும் அருள்மிகு பூமிகாவலன் சுவாமி ஆகிய தெய்வங்களுக்கு அன்னாபிஷேகம் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

வருஷாபிஷேகம்

நமது விஸ்வகர்ம குலதெய்வ வழிபாட்டு மக்களுக்கு என்று தனி திருக்கோவில் நிர்மானிக்க வேண்டும் என்ற நீண்ட நாள் ஆவலை நமது வழிபாட்டு மக்களின் தர்மகர்த்தா தெய்வத்திரு ராமர் ஆச்சாரி மற்றும் அவரது துணைவியார் தெய்வத்திரு. சரஸ்வதி அம்மாள் அவர்கள் சீரிய தலைமையில் விடாமுயற்சியின் பலனால் நமது திருக்கோவில் 2016-ம் ஆண்டு தை மாதம் 6-ம் தேதி ரோகிணி நட்சத்திரத்தில் சுபயோக சுபதினத்தில்(ஆங்கிலத்தில் 20.01.2016) நமது விஸ்வகர்ம மடாதிபதி முன்னிலையில் சிறப்பாக கும்பாபிஷேகம் நடைபெற்றது. அந்த நன்னாளை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் தை மாத ரோகிணி நட்சத்திரத்தன்று நமது குலதெய்வங்களுக்கு சிறப்பான அபிஷேக, அலங்கார பூஜைகளுடன் கூடிய வருஷாபிஷேக விழாளையும் சீரும் சிறப்புடன் நடத்துகிறார்கள்.

மாதாந்திர பூஜைகள்

நமது திருக்கோவில் அருள்மிகு உத்தண்ட காளையப்ப சுவாமிக்கு மாதந்தோறும் தேய்பிறை அஷ்டமி திதியில் சுவாமியை அருள்மிகு காலபைரவராக உருவகப்படுத்திக் கொண்டு தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை நடத்துவார்கள்.

நமது திருக்கோவிலில் அருள்தரும் நாச்சியார் அம்மன் சுவாமிக்கு மாதந்தோறும் கடைசி வெள்ளிக்கிழமை அன்றுமாதந்திர வெள்ளி) ராகு காலத்தில் (காலை 10.30 மணிக்குமேல் 12 மணிக்குள்) சிறப்பு பூஜை நடத்துவார்கள்.

நமது திருக்கோவில் குலதெய்வங்களுக்கு மாதந்தோறும் பெளர்ணமி திதியில் சிறப்பு அபிஷேக அலங்கார பூஜை நடத்துவார்கள்

Festival Details

நித்திய பூஜை

நமது திருக்கோவில் குலதெய்வங்களுக்கு தினந்தோறும் காலை 10 மணிக்கு மேல் மதியம் 1 மணிக்குள் நித்திய பூஜைகள் நேர்த்தியான முறையில் நடத்துவார்கள்.