Welcome to Sacred Grounds

ஸ்ரீ பெரியாண்டவர் திருக்கோவில்

தொன்மையான ஆன்மிக பாரம்பரியத்தையும், குலதெய்வ வழிபாட்டு மரபையும் தாங்கி நிற்கும் அருள் மிகு ஸ்ரீ பெரியாண்டவர் திருக்கோவில், பக்தர்களுக்கு அமைதி, நம்பிக்கை மற்றும் இறையருள் வழங்கும் புனித ஸ்தலமாக விளங்குகிறது.

Divine Blessings for All Devotees

அருள்மிகு குலதெய்வ அருள் நிலையம்

தலைமுறைகள் தொடர்ந்தும் வழிபட்டு வரும் குலதெய்வ அருளைப் பெறும் புனித ஸ்தலமாக, இத்திருக்கோவில் பக்தர்களின் வாழ்வில் செழிப்பு, ஆரோக்கியம் மற்றும் ஆனந்தத்தை வழங்கி வருகிறது. சிறப்பு பூஜைகள், திருவிழாக்கள் மற்றும் ஆன்மிக நிகழ்வுகள் பக்தி உணர்வை உயர்த்துகின்றன.

  • குலதெய்வ வழிபாட்டு புனித ஸ்தலம்

  • அருள் மிகு ஸ்ரீ பெரியாண்டவர் திருக்கோவில்

  • பக்தர்கள் நல்வாழ்வு தரும் தெய்வம்

  • பக்தி வளர்க்கும் புனித நிலம்

Sacred Ceremonies

ஸ்ரீ பெரியாண்டவர் திருக்கோவில்

ஸ்ரீ பெரியாண்டவர் திருக்கோவில் என்பது பக்தர்கள் அனைவருக்கும் அருள் வழங்கும் புனித தலமாக விளங்குகிறது. தொன்மையான ஆன்மீக பாரம்பரியத்தையும், கிராமிய நம்பிக்கைகளையும் தாங்கி நிற்கும் இத்திருத்தலம், பல தலைமுறைகளாக பக்தர்களின் குலதெய்வ வழிபாட்டு மையமாக இருந்து வருகிறது. இத்திருக்கோவில் அமைந்துள்ள புனித சூழல், பக்தர்களுக்கு மன அமைதியையும் ஆன்மிக நிறைவையும் அளிக்கிறது. தினசரி பூஜைகள், மாதாந்திர வழிபாடுகள் மற்றும் ஆண்டு திருவிழாக்கள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. நமது கோவிலில் மேள, தாளம் கிடையாது. ஆனால், வில்லுப்பாட்டு மூலமாக சுவாமியையும், அம்மனையும் வருந்தி வேண்டிப் பாட்டாகப் பாடுவது மரபாக உள்ளது.

00

+

ஆண்டுகள் ஆன்மிக பாரம்பரியம்

Festivals

Sacred Festivals of Our Temple

மகா சிவராத்திரி விழாதான் முக்கியத் திருவிழா மற்றும் ஸ்ரீமருதப்ப சுவாமியின் ஜென்ம நட்சத்திரமான உத்திரம் பங்குனி மாத கொடை விழாவும் காலம் காலமாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு பிரதி தமிழ் மாதங்களில் வரும் அமாவாசை, பௌர்ணமி மற்றும் வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் மக்கள் தங்களது நேர்த்திக்கடன் செலுத்த இக்கோவிலுக்கு வருவார்கள்.

Visit Our Sacred Temple

இறை வழிபாட்டில் கலந்து அருள் பெறுங்கள்

00

+

Years Heritage
300 ஆண்டுகள் பாரம்பரியம்

00

+

Daily Poojas
தினசரி பூஜைகள்

00

+

Devotees Visit
பக்தர்கள் தரிசனம்

Temple Highlights

கோவில் சிறப்புகள்
Divine Glory of Our Sacred Temple

300+ Years Heritage
300+ ஆண்டுகள் பாரம்பரியம்

Kuladeivam Temple
குலதெய்வ வழிபாட்டு ஸ்தலம்

Grand Festivals
ஆண்டு திருவிழா சிறப்புகள்

Special Poojas
தினசரி & சிறப்பு பூஜைகள்

Divine Blessings
இறையருள் வழங்கும் திருத்தலம்

Spiritual Peace
அமைதி தரும் ஆன்மிகத் தலம்

நிர்வாகக் குழு

கோவில் நிர்வாகக் குழு
Temple Administration Committee

நமது திருக்கோவில் நிர்வாக கமிட்டி தலைவராக தெற்கு வெங்காநல்லூர் தெய்வத்திரு.ராமர் ஆச்சாரி குமாரர் திரு. வேல்முருகன் ஆச்சாரி அவர்கள் நிர்வகித்து வகுகிறார். நிர்வாக கமிட்டி செயலாளராக கூனங்குளம் தெய்வத்திரு. சுந்தரமகாலிங்கம் ஆச்சாரி என்ற பாலு ஆச்சாரி குமாரர் திரு. செல்வராஜ் ஆச்சாரி செயலாற்றி வருகிறார். நிர்வாக கமிட்டி பொருளாளராக தெற்கு வெங்கநல்லூர் தெய்வத்திரு சீனிவாசன் ஆச்சாரி என்ற மாணிக்கம் ஆச்சாரி குமாரர் திரு சுப்புராம் ஆச்சாரி ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.

அலைபேசி எண்கள்:

  • தலைவர் : 9443554038, 8072776390.
  • செயலாளர் : 9994938342.
  • பொருளாளர் : 9943233758, 6369187839.
  • கோவில் சர்மா(பூசாரி) : 9345214422, 8610620121.
Temple Committee
Temple Beliefs & Faiths

கோவிலில் நடைமுறையிலுள்ள நம்பிக்கைகள்

பக்தர்கள் இறைநம்பிக்கையுடன் வழிபடும் போது தெய்வ அருளால் பல நன்மைகள் கிட்டும் என்பது ஐதீகமாக நம்பப்படுகிறது.

  • பேச்சியம்மன் அருள்

    பேச்சியம்மன் சுவாமிக்கு சர்க்கரைப் பொங்கல், மற்றும் வெண் பொங்கல் படைத்தால் தீய சக்திகள் (பேய்) அணுகாது என்பது ஐதீகம்.

  • உத்தண்டகாளை சுவாமி அருள்

    மருளாடி பேரில் அருளாகி வில்லடிமுன் ஆடுவார்கள். பக்தர்களுக்கு பேய் விரட்டுதல், பில்லி சூனியம் நிவர்த்தி, குழந்தை வரம் வழங்குதல் போன்ற நற்செயல்கள் நடைபெறும்.

  • குலதெய்வ அருள்

    குலதெய்வமாக வழிபடும் மக்களுக்கு சுவாமியின் கருணையால் பில்லி, சூன்யம், நோய் நொடி அண்டாது. வேண்டி பிரார்த்தனை செய்தால் நினைத்தவை நினைத்தபடி நடக்கும் என்பதும் ஐதீகம்.

Temple Beliefs