பேச்சியம்மன் அருள்
பேச்சியம்மன் சுவாமிக்கு சர்க்கரைப் பொங்கல், வெண் பொங்கல் மற்றும் அசைவ உணவு படைத்தால் தீய சக்திகள் (பேய்) அணுகாது என்பது ஐதீகம்.
ஸ்ரீ பெரியாண்டவர் திருக்கோவில் என்பது பக்தர்கள் அனைவருக்கும் அருள் வழங்கும் புனித தலமாக விளங்குகிறது. தொன்மையான ஆன்மீக பாரம்பரியத்தையும், கிராமிய நம்பிக்கைகளையும் தாங்கி நிற்கும் இத்திருத்தலம், பல தலைமுறைகளாக பக்தர்களின் குலதெய்வ வழிபாட்டு மையமாக இருந்து வருகிறது. இத்திருக்கோவில் அமைந்துள்ள புனித சூழல், பக்தர்களுக்கு மன அமைதியையும் ஆன்மிக நிறைவையும் அளிக்கிறது. தினசரி பூஜைகள், மாதாந்திர வழிபாடுகள் மற்றும் ஆண்டு திருவிழாக்கள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. நமது கோவிலில் மேள, தாளம் கிடையாது. ஆனால், வில்லுப்பாட்டு மூலமாக சுவாமியையும், அம்மனையும் வருந்தி வேண்டிப் பாட்டாகப் பாடுவது மரபாக உள்ளது.
மகா சிவராத்திரி விழாதான் முக்கியத் திருவிழா மற்றும் ஸ்ரீமருதப்ப சுவாமியின் ஜென்ம நட்சத்திரமான உத்திரம் பங்குனி மாத கொடை விழாவும் காலம் காலமாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு பிரதி தமிழ் மாதங்களில் வரும் அமாவாசை, பௌர்ணமி மற்றும் வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் மக்கள் தங்களது நேர்த்திக்கடன் செலுத்த இக்கோவிலுக்கு வருவார்கள்.
Years Heritage
300 ஆண்டுகள் பாரம்பரியம்
Daily Poojas
தினசரி பூஜைகள்
Devotees Visit
பக்தர்கள் தரிசனம்
அருள் மிகு ஸ்ரீ பெரியாண்டவர் திருக்கோவிலின் அனைத்து ஆன்மிக மற்றும் சமூக பணிகளும் நிர்வாகக் குழுவினரால் சிறப்பாக ஒருங்கிணைக்கப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது. நமது திருக்கோவிலில் குலதெய்வங்களுக்கு தினந்தோறும் காலை 10 மணிக்கும், மாலை 1 மணிக்கும் நித்ய பூஜைகள் சிறப்பாக நடைபெறுகின்றன. திருக்கோவில் நீராட்டு கமிட்டி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் திரு. வேலுமுருகன் அவர்கள் தலைமையில் கமிட்டி உறுப்பினர்கள் சிறப்பாக சேவையாற்றி வருகின்றனர்.
பக்தர்கள் இறைநம்பிக்கையுடன் வழிபடும் போது தெய்வ அருளால் பல நன்மைகள் கிட்டும் என்பது ஐதீகமாக நம்பப்படுகிறது.
பேச்சியம்மன் சுவாமிக்கு சர்க்கரைப் பொங்கல், வெண் பொங்கல் மற்றும் அசைவ உணவு படைத்தால் தீய சக்திகள் (பேய்) அணுகாது என்பது ஐதீகம்.
மருளாடி பேரில் அருளாகி வில்லடிமுன் ஆடுவார்கள். பக்தர்களுக்கு பேய் விரட்டுதல், பில்லி சூனியம் நிவர்த்தி, குழந்தை வரம் வழங்குதல் போன்ற நற்செயல்கள் நடைபெறும்.
குலதெய்வமாக வழிபடும் மக்களுக்கு சுவாமியின் கருணையால் பில்லி, சூன்யம், நோய் நொடி அண்டாது. வேண்டி பிரார்த்தனை செய்தால் நினைத்தவை நினைத்தபடி நடக்கும் என்பதும் ஐதீகம்.